நீண்டகாலமாக போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் நகரைச் சேர்ந்த மருந்தக உரிமையாளர் ஒருவரே ஹட்டன் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
மருந்தக உரிமையாளர் இளைஞர்களைக் குறிவைத்து, மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் இந்த மருந்துகளை மிக அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ஹட்டன் பிரதேச சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகரவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது கைதான நபரிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 1400 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


















