அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக, ஒரு பிள்ளைக்கு 6,000 ரூபாய் வீதம் கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அஸ்வெசும திட்டத்திலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள், நலன்புரி நன்மைகள் சபை ஊடாக இக்கொடுப்பனவைப் பெறுவர்.
அத்துடன் அஸ்வெசுமவில் உள்வாங்கப்படாத, 300க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் பயிலும் மாணவர்களும், பிரிவெனாக்கள் மற்றும் துறவுப் பெண்கள் ஆச்சிரமங்களில் கல்வி பயில்கின்ற மாணவர்கள், துறவு மாணவர்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் தங்கியிருந்து பாடசாலை செல்லும் மாணவர்கள் ஆகியோரும் குறித்த கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்களாவர்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.


















