-பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பம்-
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் கடற்படை மாலுமிகளின் சடலத்தை தம்மிடம் அனுப்பிவைக்குமாறு ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.
மேற்படி தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்ட சுமார் 90 ஈரானியர்களின் உடல்கள் கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த சடலங்களை தம்மிடம் அனுப்பிவைக்குமாறு ஈரான் அரசாங்கம் இலங்கை அதிகாரிகளிடம் அதிகாரபூர்வமான கோரிக்கையினை முன்வைத்துள்ளது.
இதனையடுத்து சடலங்களை அனுப்பிவைப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுவருகின்றது. அந்த ஒழுங்குகள் நிறைவடையும்வரை சடலங்களை வைத்தியசாலையின், குளிர்பதன கிடங்கில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் சுமார் 90 உடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்வதால், எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என நம்பப்படுகிறது.


















