கண்டி, கடுகண்ணாவை பிரதேசத்தில் மின் கம்பத்தில் போதைப்பொருளை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்த சந்தேகநபரொருவர் மோட்டார் சைக்கிளுடன் பொலிஸாரால் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் 30 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கடுகண்ணாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் மின் கம்பத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருளை பொதி செய்து மறைத்து வைத்து அந்த பகுதியை புகைப்படம் எடுத்து அனுப்பி அதனை வந்து எடுக்குமாறு கூறி விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகண்ணாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















