2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொது ஆலோசனைகளைக் கோருவதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஆலோசனைக் காலம் : முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் குறித்த எழுத்துப்பூர்வமான கருத்துக்களை 2026 மார்ச் 18 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.
வாய்மூல கருத்துப் பகிர்வு : பல்வேறு மாவட்டங்களில் இதற்கான அமர்வுகள் நடைபெறவுள்ளன.

மார்ச் 07: அம்பாறை
மார்ச் 11: வவுனியா
மார்ச் 12: மாத்தளை
மார்ச் 16: அம்பாந்தோட்டை
மார்ச் 18: கொழும்பு (பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபம்)


















