பொதுமக்களின் அன்றாட தேவைக்கான மின்சாரம், எரிபொருள், சுகாதாரம் உள்ளிட்ட பல முக்கியமான சேவைத் துறைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவின் கையொப்பத்துடன் மேற்படி அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, மின்சாரம், சுகாதாரம், எரிபொருள் போன்றன தொடர்ந்தும் அதியாவசிய சேவைகளாக, பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்தச் சேவைகள் எவ்விதத் தடையுமின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக நடைமுறைக்கு வருவதுடன், இதன் மூலம் குறித்த துறைகளில் பணிபுறுவோர் எவ்வித பணிப்பகிஷ்கரிப்பு அல்லது சேவைத் தடைகளை மேற்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


















