தீபாவளி பண்டியையை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையினால் புதிய கல்லடி பாலத்தில் அலங்கார மின்னொளி வளைவு திறந்துவைக்கப்பட்டது.
நேற்று இந்துக்கள் தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில் அதனை சிறப்பிக்கும் வகையில் இந்த அலங்கார மின்னொளி வளைவு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநகரசபை பிரதி முதல்வர் டினேஸ் மாநகரசபை ஆணையாளர் என்.தனஞ்செயன், மாநகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டு திறந்துவைத்தனர்.
மின்னொளி அலங்கார வளைவு திறக்கப்பட்டதை தொடர்ந்து வானவேடிக்கைகளும் நடைபெற்றது.



















