மிரிஹான, கிம்புலாவல பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்வினைப் பார்க்க வந்த 31 இளைஞர்கள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிம்புலாவல கமதா என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்க்க வந்த இளைஞர்கள் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் மிரிஹான குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும், இவர்களிடமிருந்து பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


















