காலி – மீட்டியாகொட பகுதியில் திங்கட்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள பொலிஸார் மூன்று சிறப்புக் குழுக்களை நியமித்துள்ளனர்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள உணவகம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 48 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் இடம்வெற்று வரும் தகராறுடன் தொடர்புடையது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த பெண் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















