-முல்லைத்தீவில் நடைபவனி-
-பா.சதீஸ்-
‘சர்வதேச மீன்பிடியை ஒழித்து எமது உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடைபவனியொன்று நேற்று முல்லைத்தீவு கடற்கரையில் இடம்பெற்றது.
சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட கரையோர இளைஞர்கள் இணைந்து மேற்படி நடைபவனியினை காலை நடத்தினர்.

நடைபவனியில் ஈடுபட்டோர் முல்லைத்தீவின் இளம் மீனவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலம் வேண்டும், முல்லைத்தீவு கடற்கரையை காக்க சட்டவிரோத மீன்பிடியை நிறுத்தவும், கடலை பாதுகாப்போம் சட்டவிரோதத்தை தடுப்போம், எங்கள் பாரம்பரிய கடலில் உங்கள் சட்டவிரோத படகுகள் வேண்டாம் போன்ற பல்வேறு பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
நடைபவனியின் நிறைவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கான மகஜர் மாவட்ட செயலக பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டது.


















