சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் சுமார் 15 இலட்சம் கோழிகள் உயிரிழந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தெதுறு ஓயாவை அண்டிய பகுதிகளில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் மாத்திரம் சுமார் 10 இலட்சம் கோழிகள் உயிரிழந்துள்ளன.
இதன்காரணமாக, முட்டை உற்பத்தி நூறில் நாற்பது வீதம் குறைவடைந்துள்ளதாகவும் முட்டையின் விலை உயர்ந்துள்ளதாகவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
















