நாட்டின் முதல் இளைஞர் மேம்பாடு குறித்தான மாநாடு செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க தெரிவித்தார்.
இதன் பிரகாரம் ஆராய்ச்சி முன்மொழிவுகளுக்கான அழைப்பு தொடங்கப்பட்டுள்ள நிலையில்,எதிர்வரும் மே 4 ஆம் திகதி வரை ஆராய்ச்சி முன்மொழிவு ஆவணங்களை சமர்ப்பிக்கலாமெனவும் அவர் தெரிவித்தார்.
இளைஞர் மேம்பாட்டு ஆராய்ச்சி மாநாடு குறித்து நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பிரதி அமைச்சர் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
இலங்கையில் ஆராய்ச்சி நடத்தப்பட்டாலும், இளைஞர் மேம்பாடு குறித்து முறையான ஆராய்ச்சி எதுவும் நடத்தப்படவில்லை. இந்த ஆராய்ச்சி நாட்டின் எதிர்கால இளைஞர் மேம்பாட்டு முயற்சிகளுக்கு பெரும் பங்களிப்பை வழங்க முடியும்.
அடிப்படை ஆராய்ச்சிப் பணிகளுக்காக ஒரு ஆராய்ச்சியாளருக்கு ரூ.25,000 வழங்கப்படவுள்ளது.
இளைஞர் மேம்பாடு தொடர்பான ஒன்பது துறைகள் மூலம் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட உள்ளது.
இந்த ஆராய்ச்சி மாநாட்டில் பிரதம விருந்தினராக பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய பங்கேற்கின்றார்.


















