-த.சுபேசன்-
இலங்கையின் முன்பள்ளிக் கல்வி மேம்பாடு பற்றிய கலந்துரையாடல் அரும்பு முன்பள்ளி கல்வி மேம்பாட்டு அமைப்பின் ஆதரவில் அண்மையில் லண்டனில் உள்ள உயர் வாசற்குன்று முருகன் ஆலய மண்டபத்தில் லண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலய அறங்காவலர் தேவ சகாயம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தாயகத்திலுள்ள முன்பள்ளிகளின் ஆசிரியர்களுடைய கல்வி தரம், அவர்களுடைய மாதாந்த ஊதியம், ஓய்வூதியம், விடுமுறை, முன்பள்ளி சிறார்களுடைய சத்துணவு, முன்பள்ளிகளின் பௌதீக வளக்குறைபாடு மற்றும் முன்பள்ளி கல்வியை இலங்கை அரசு தேசிய மயமாக்கும் வரை அதனை மேம்படுத்துவதில் புலம்பெயர் உறவுகளுடைய பங்களிப்பு ஆகிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.


















