இலங்கையின் சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது இலங்கையில் செல்லுபடியாகும் சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் வெளிநாட்டவர்கள் எந்தவொரு வாகனத்தையும் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யூ. வூட்லர் கூறியுள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் சட்டவிரோதமாக முச்சக்கரவண்டிகளை ஓட்டிச் செல்லும் போக்கு அதிகரித்து வருவதைக் காவல்துறை அவதானித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது சட்டவிரோதமானது என்றும், இந்த வாடகை வாகனங்களின் உரிமையாளர்களுக்கு எதிராகக் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் தெரிவித்தார். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகள் என அனைவரும் நாட்டில் வாகனங்களைப் பயன்படுத்தும்போது இலங்கையின் மோட்டார் வாகனப் போக்குவரத்துச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்குக் கண்டிப்பாகக் கட்டுப்பட வேண்டும்.
செல்லுபடியான அனுமதிப்ப த்திரம் இல்லாமல் பல வெளிநாட்டவர்கள் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டதால், அவர்களுக்கு எதிராக காவல்துறை, சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


















