திடீரென கொட்டிய கனமழையால் மலையகப் பகுதிகள் முழுவதும் மூடுபனியாக மாறியுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அமைந்துள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகின்றது.
கொட்டித் தீர்க்கும் கனமழையால் மலையகப் பகுதிகள் முழுவதும் அடர்ந்த மூடுபனியாக மாறியுள்ளது.
கனமழை மற்றும் மூடுபனியால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன்-நுவரெலியா மற்றும் ஹட்டன்-கொழும்பு பிரதான வீதிகளிலும், கிளை வீதிகளிலும் அடர்ந்த மூடுபனி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே குறித்த வீதிகளில் வாகனம் செலுத்தும்போது முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து, மெதுவாகவும், கவனமாகவும் வாகனங்களை செலுத்துமாறு ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


















