-க.கனகராசா-
தொழில் வழிகாட்டுதல் மூலம் மூன்றாம் நிலை கல்வியை மேம்படுத்துவதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சினால் க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான விசேட நிகழ்ச்சி திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு மாணவர்களை பதிவு செய்யும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பதிவு ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலிருந்தும் தலா ஒரு பாடசாலை தெரிவு செய்யப்பட்டு ஜனவரி 19 ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம், விளையாட்டும் உடற்பயிற்சியும், இலக்கிய நயமும் அழகியலும் மற்றும் தொழில் திறவுகோல் பரீட்சைகள் வார நாட்களில் மாலை 2.30 தொடக்கம் 4.30 வரை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே 2025 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை இணைக்கப்பட்டுள்ள QR code இனை பயன்படுத்தி பதிவு செய்வதற்கு மாணவர்களை ஆவன செய்யுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.


















