-சி.ஜெகதீஸ்வரன்-
கிளிநொச்சி மருதநகரைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மூளையில் கிருமித் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் சசிகரன் (வயது-31) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
கடந்த எட்டாம் திகதி காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து சிகிச்சை பெறாது வீட்டில் இருந்துள்ளார்.
காய்ச்சல் கூடியதால் 22 ஆம் திகதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலை மாற்றப்பட்ட நிலையில் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார் சாட்சிகளை கிளிநொச்சி பொலிசார் நெறிப்படுத்தினர். பிரேத பரிசோதனையில் மூளையில் கிருமித் தொற்று ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.


















