புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ்.சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
நீதித்துறை சேவையில் விசேட தர அதிகாரியான எஸ். சதீஸ்தரன் சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.


















