-வவுனியா, மன்னாரில் தாக்கம் அதிகம்-
நாடளாவிய ரீதியில் தற்போது நிலவி வரும் வெப்பமான காலநிலையானது, எதிர்வரும் மே மாதம் வரையில் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சபரகமுவ, வடமேல், வடமத்திய மாகாணங்களிலும் வெப்பமான காலநிலை நிலவும்.
வவுனியா, மன்னார், ஹம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மகக்ள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உடல் வெப்பத்தைத் தணிப்பதற்கு தேவையான அளவு நீர் அருந்துமாறும், தேவையற்ற விதத்தில் வெளியில் நடமாடுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


















