மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரகல பகுதியிலுள்ள காட்டில் தீப் பரவல் ஏற்பட்டதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீப் பரவல் ஏற்பட்டதாக மொனராகலை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய மொனராகலை பொலிஸ் நிலைய அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று இரவு இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீப் பரவலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
மொனராகலை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















