மொரகஹஹேன, கோரலைம பகுதியில் அமைந்துள்ள கிராமிய வங்கி ஒன்றில் இன்று (23) அதிகாலை துணிகர கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிகாலை 1.00 மணியளவில் வங்கி வளாகத்திற்குள் நுழைந்த மூன்று பேர் கொண்ட குழு, அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களைக் கட்டிவைத்து, வங்கியின் பின்புறக் குளியலறை ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து, அதற்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த துணிகர கொள்ளையில் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


















