திருகோணமலை,ஈச்சிலம்பற்று உப்பூறல் பகுதில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தத்துடன் மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் தோப்பூர் – 06ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜௌசீர் அமான் வயது (18) என தெரியவருகிறது.
குறித்த மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணித்திருந்த நிலையில், வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரமொன்றுடன் மோதியதில் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


















