பதுளை – மஹியங்கனை, கிராதுருகொட்டாவ பகுதியில் யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பதுளை, கைலகொட பகுதியைச் சேர்ந்த ஐந்து ஆண்கள், ஆறு பெண்கள் மற்றும் 10 வயதுச் சிறுவன் வான் சாரதி ஆகியோர் காயடைந்துள்ளனர்.
அனுராதபுரத்திற்கு யாத்திரை சென்றுவிட்டு பதுளைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, வான் சாரதி தூங்கியதால் வான் வீதியை விட்டு விலகி பெரிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் காயடைந்தவர்களை மீட்டு மஹியங்கனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பணிகளை பொலிஸார் முன்னெடுத்தனர்.
விபத்தில் வான் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
















