-த.சுபேசன்-
‘அனைத்து மதகுருமார்களும் மரியாதைக்கு உரியவர்களே’ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரிக்கர் ஒட்டி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
யாழ். மாவட்ட சர்வமதக் குழுவானது இலங்கைத் தேசிய சமாதானப் பேரவை மற்றும் சொண்ட் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் மேற்படி நிகழ்வை முன்னெடுத்திருந்ததுடன், பேருந்துகளில் மத குருமார்களுக்கான ஆசன ஒதுக்கீடு தொடர்பாக விழிப்புணர்வு ஸ்ரிக்கர்களையும் ஒட்டியிருந்தது.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன், தேசிய சமாதான பேரவையின் திட்ட உத்தியோகத்தர் நிரோசா அன்ரனி, வவுனியா பல்கலைக்கழக வேந்தர் சு. மோகனதாஸ், சொண்ட் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் செந்துர்ராஜா, இலங்கை போக்குவரத்துச் சபையின் கோண்டாவில் காரியாலய உத்தியோகத்தர், மதகுருமார்கள், அருட்சகோதரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


















