-அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ-
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் ஓரணியில் இணைவதால், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்கு எந்தவிதப் பாதிப்புகளும் ஏற்படாதென அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது; ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த நாட்டை அழித்த கட்சிகள். இவ்விரு கட்சிகளும் இணைவதாலோ அல்லது புதிய கூட்டணி அமைப்பதாலோ எமது ஆட்சிக்கு எந்தவிதப் பாதிப்புகளும் ஏற்படாது. தேசிய மக்கள் சக்தி அரசு நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், பொதுமக்களின் நலனுக்காகவும் செயற்படுகின்றது. நாட்டு மக்கள் எம் பக்கமே உள்ளனர்.எனவே, ரணில் – சஜித் தரப்பினர் சேர்ந்தாலும் எதுவும் நடக்கப்போதில்லை, இப்போதுள்ளதுபோல பிரிந்திருந்தாலும் எதுவுமே நடைபெறப்போவதுமில்லை என்றார்.


















