திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் ரயில் மோதி யானை ஒன்று உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயில் மோதியே குறித்த யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் கால் நடை வைத்தியர் விரைந்து யானை உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

















