வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முதல் வடகீழ்ப் பருவத்தில் நிகழும் இடி மின்னல் மழை தொடங்கும் என யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நண்பகலை அண்மித்து அல்லது மாலை அல்லது இரவில் இந்த மழை கிடைக்கும். ஆனால் ஒரே நாளில் அல்லது ஒரே நேரத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் கிடைக்காது. குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே கிடைக்கும்.
ஆனால் எதிர்வரும் 6 ஆம் திகதிக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் இந்த இடி மின்னல் மழை கிடைத்துவிடும்.


















