-ஸார்ப் நிறுவனம் அறிவிப்பு-
-சு.பாஸ்கரன்-
வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஈடுபட்டு வரும் ஸார்ப் நிறுவனம் சுமார் பத்து வருட காலப்பகுதியில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 37,78, 161 சதுரமீற்றர் பரப்பளவிலிருந்து 82,170 அபாயகரமான வெடிபொருட்களை மீட்டுள்ளது.
மேற்படி விடயம் தொடர்பில் அந்; நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்:
இலங்கையின் வடபகுதியில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடுகளின் நிதியுதவியுடன் மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணிகளை ஸார்ப் மேற்கொண்டு வருகின்றது. 2016 நவம்பர் முதல் கடந்த பெப்ரவரி மாதம்; இதுவரையான காலப்பகுதியில் எமது நிறுவனம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள தச்சடம்பன்,அம்பகாமம்,ஒழுமடு பகுதிகளிலும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள மாங்குளம்,கொக்காவில் ஆகிய பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை, கிளாலி, இயக்கச்சி மற்றும் ஆனையிறவிலும் கண்டாவளை பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள தட்டுவன்கொட்டி பகுதியிலும் 37,78, 161 சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து 82,170 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளது.
இவ்வாறான நிலையில், ஸார்ப் நிறுவனம் புதுக்குடியிருப்பு, அம்பகாமம்,மாங்குளம், கொக்காவில், தட்டுவன்கொட்டி மற்றும் ஆனையிறவிலும் கண்ணிவெடியகற்றும் பணிகளை துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















