வடமாகாணத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவம், பொலிஸ் ஈடுபட்டிருந்தால் அது குறித்த தகவல்களை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கவேண்டும் என பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று வரவுசெலவுத் திட்டத்தின் மீதான 4ம் நாள் விவாதம் இடம்பெற்றது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபடுவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டுகின்றார். அவ்வாறு முறையற்ற வகையில் செயற்படும் இராணுவத்தினர், பொலிஸார் யார், அவர்களின் சேவை பிரதேசம் தொடர்பான விபரங்களை அவர் வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு குறிப்பிட்டால் ஆராய்ந்து பார்ப்போம். இவர் குறிப்பிடுவதை போன்று பாதுகாப்பு தரப்பினர் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபடவில்லை என்றார்.


















