மற்றுமொரு எரிபொருள் கப்பல் நேற்று திங்கட்கிழமை காலை நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், அதிலுள்ள எரிபொருட்களை தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வருகை தந்துள்ள கப்பலில் 18,000 மெட்ரிக் தொன் டீசல், 17,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 3,000 மெட்ரிக் தொன் சுப்பர் டீசல் உள்ளடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து கப்பல்களும் நாட்டை நோக்கி வந்துகொண்டிருப்பதுடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் கோரிக்கைகளுக்கு அமைய விநியோக நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


















