-ஞானத்தமிழ்-
தென்மராட்சி கலாசார மத்திய நிலையம் நடாத்தும் கலைவிழாவும் கௌரவிப்பு நிகழ்வும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு வரணியில் உள்ள தென்மராட்சி கலாசார மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வு கலாசார மத்திய நிலையப் பொறுப்பதிகாரி ஜெ.கிரிதரன் தலைமையில் நடைபெறவுள்ளதுடன் தென்மராட்சிப் பிரதேச செயலர் பி.ச.சத்தியசோதி பிரதம விருந்தினராகவும் கிளிநொச்சி மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் வே.சிவராஜா சிறப்பு விருந்தினராகவும் தென்மராட்சி வலய அழகியல் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி விஜிதா சுனில் ஆரியரட்ண துறைசார் விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதில் கலாசார மத்திய நிலைய மாணவர்களின் கலைநிகழ்வுகளும் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய கலை இலக்கிய விழாவில் தேசிய ,மாகாண மற்றும் மாவட்டமட்டங்களில் கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றியீட்டியோருக்கான கௌரவிப்பு மற்றும் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்தோருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு ஆகியன நடைபெறவுள்ளன.


















