வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட முன்மொழிவு நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் என தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முதலீட்டை ஈர்ப்பதையும், உட்கட்டமைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டங்களுக்கு கிடைக்கக்கூடிய வரையறுக்கப்பட்ட நிதி வளங்களைப் பயன்படுத்த அரசாங்கம் விரும்புகிறது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
2026 வரவு – செலவுத்திட்ட முன்மொழிவு குறித்து கருத்து தெரிவிக்கும் போது அனில் ஜெயந்த பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

















