2026ம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
2026ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நவம்பர் 7ம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன் பிறகு, வரவு–செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் (ஆறு நாட்கள்) நவம்பர் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை நடைபெற்றது.
இதனடிப்படையில், நவம்பர் 15 ஆம் திகதி மூன்றாம் வாசிப்பு மீதான விவாதங்கள் தொடங்கின. அந்த விவாதத்தின் கடைசி நாள் இன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
















