மட்டக்களப்பு, அரசடியில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
கொழும்பிலிருந்து, அக்கரைப்பற்று நோக்கி செல்வதற்காக சென்றிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரியவருகின்றது.
இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணி வரை தமது மகன் தங்களுடன் தொடர்பில் இருந்ததாக உயிரிழந்தவரின் தந்தை தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரும், தடயவியல் பிரிவு பொலிஸாரும் முன்னெடுத்து வருகின்றனர்.


















