வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சிறுவர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தையின் முன்னால் நேற்று புதன்கிழமை மாலை குறித்த எதிர்ப்பை வெளியிட்டனர்.

குறித்த இடத்தில் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்திருந்த உண்ணாவிரதப் போராட்டம் நேற்று புதன்கிழமை ஐந்தாவது நாளில் நிறைவடைந்திருந்தது.
இதன்போது அதே இடத்தில் சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்கள் ஒன்று கூடி, சிறு ஊர்வலத்துடன், தலையில் கறுப்புப் பட்டி அணிந்து கரிநாளாக அனுஷ்டித்து தீப்பந்தம் ஏந்தி எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதன்போது கடந்த காலங்களில் காணாமல் சென்ற சிறுவர்களின் நிலைமை குறித்த பல்வேறு கோஷங்களை எழுப்பி இருந்தனர்.



















