-பேராயர் பத்தயாளன்-
-சப்தசங்கரி-
இயற்கை அனர்த்தம் என்பது கடவுளால் தரும் அழிவு அல்ல. மாறாக எம் வாழ்க்கையை மீட்டுப் பார்க தரும் சந்தர்ப்பம் என பேராயர் வே.பத்தயாளன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற ஒன்றிணைந்த நத்தார் இன்னிசை வழிபாட்டில் கலந்து கொண்டு இறை செய்தி வழங்கிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
இயற்கை அனர்த்தம் என்பது கடவுளால் தரும் அழிவு அல்ல. எம் வாழ்க்கையை மீட்டுப் பாரக்;க தரும் சந்தர்ப்பம் இதுவாகும்.
இவ்வாறான பேரிடர்கள், அழிவுகள் கடவுளால் கொடுக்கப்படும் தண்டனை அல்ல. கடவுள் இவ்வாறான சம்பவங்கள் மூலம் அழிப்பவர் அல்ல.
ஆனால், பேரிடர்கள், இயற்கை அனர்த்தங்கள் மூலம் எமது வாழ்வை மீட்டுப் பார்க்க சந்தர்ப்பங்களை ஏற்படுத்துகிறார்.
தனிமனித செயற்பாடுகள், சிந்தனைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவும், கடந்த கால செயற்பாடுகளை மீட்டுப் பார்க்கவும் இவ்வாறான அனர்த்தங்களை அனுமதிக்கின்றார்.
இந்த கிறிஸ்மஸ் காலங்களில் எம்மை நாமே மீட்டிப் பார்த்து, கடவுளுக்கு எற்ற பிள்ளைகளாக மாற்றம் செய்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.


















