முல்லைத்தீவு – விசுவமடு மகாவித்தியாலயத்தின், விளையாட்டுமைதானத்திற்கான சுற்றுவேலியின் ஒருபகுதியை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது 2026ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின்மூலம் அமைத்துக் கொடுத்துள்ளார்.
குறிப்பாக விசுவமடு மகாவித்தியாலய பாடசாலைச் சமூகத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமை தனது பன்முகப்படுத்தப்பட்ட 200,000ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குறித்த சுற்று வேலியை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் உத்தியோகபூர்வமாக கையளிப்புச் செய்துள்ளார்.
அந்தவகையில் பாடசாலை அதிபரின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேசசபைத் தவிசாளர் வே.கரிகாலன், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


















