விசேட தேவையுடையோருக்கான தேசிய விழாவானது இம் முறை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள விசேட தேவையுடையோருக்கான தேசிய விழா தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் யாழ். மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்டச் செயலக அரச அதிபர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
விசேட தேவையுடையோருக்கான தேசிய விழாவானது இம் முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதோடு, இந்த நிகழ்வில் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் இருந்தும் விசேட தேவையுடையோர் சுமார் 650 பேரின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

















