உயர்தரப்பரீட்சையில் தகுதி பெறும் விசேட தேவையுடைய மாணவர்கள் நாட்டிலுள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் உள்ள அனைத்து பீடங்களிலும் அனுமதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கல்விப் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்னவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னர் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு நான்கு பீடங்களில் மாத்திரமே வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்த நிலையிலேயே இந்தப் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.


















