முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற்றியமையானது டயஸ்போராக்களையும், விடுதலைப்புலிகளையும் மகிழ்ச்சிப்படுத்துகின்ற அநுர அரசாங்கத்தின் செயற்பாடு என மொட்டுக்கட்சி ஆதரவாளர்கள் குறிப்பிட்டதாக லங்காசிறியின் பிராந்திய செய்தியாளர் வி.டில்சான் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் வெளியேற்றம் மற்றும் அங்கிருந்த சூழ்நிலைகள் குறித்து லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக்; குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் செய்த வேலையானது ஒரு அரசியல் பழிவாங்கல் என மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் குறிப்பிட்டதுடன், விடுதலைப் புலிகளின் திட்டங்களின் பட்டியலில் வருகின்ற ஒரு வேலைப்பாடு தான் இது எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
இது இவ்வாறு இருக்க மஹிந்த ராஜபக்ஷவிற்கு கொழும்பில் வீடுகளை வழங்க தமிழர் ஒருவர் உட்பட நால்வர் முன்வந்துள்ளதாக ஸ்ரீறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.


















