கண்டி – ஈ.எல்.சேனநாயக்க வீதியில் உள்ள மாணிக்ககல் விற்பனை நிலையத்திற்குள் நுழைந்த கொள்ளையன் 60 லட்சம் பெறுமதியான மணிக்க கற்களை கொள்ளையடித்து சென்றுள்ளான்.
இந்த சம்பவம் நேற்று காலை சுமார் 10.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணிக்கக்கல் வாங்குவதாக கூறி ஒருவர் அந்த வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்துள்ளார். பின்னர் அவர் வர்த்தகரின் முகத்தில் திரவமொன்றை தெளித்ததன் பின்னர், சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கங்கள் அடங்கிய பெட்டியை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.


















