மொனராகலை, புத்தள பொலிஸ் பிரிவிற்குட்பட் நாமண்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் அறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீப்பரவலால் தந்தை, தாய் மற்றும் மூன்று வயதுடைய பெண் குழந்தை ஆகிய மூவரும் பலத்த காயமடைந்துள்ளதாக புத்தள பொலிஸார் தெரிவித்தனர்.
29 வயதுடைய ஜே.எம். திலுக்ச மதுசங்க , 26 வயதுடைய கே.டி. சுராஜி சகுந்தலா மற்றும் 3 வயதுடைய ஜே.எம். ஓனல்யா ஆகிய மூவரே இவ்வாறு காயமடைந்தனர்.
காயமடைந்த மூவரும் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தாய் மற்றும் மகளின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
குறித்த வீடு எவ்வாறு தீப்பற்றியது என்பது இதுவரை கண்டறியப்படாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















