போயா விடுமுறை நாளில் வீட்டில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை பிராந்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு குழுவினருக்குக் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலையடுத்து வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.
கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைக்குடியிருப்பில் போயா விடுமுறை நாளான இன்று குறித்த விற்பனையில் ஈடுபடுவதாக சந்தேக நபர் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்து போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவர் மாறுவேடத்தில் சென்று குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு கைதானவர் அனுமதிப்பத்திரமின்றி வீட்டில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த மதுபானப் போத்தல்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.
மேலும் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


















