-வல்லை ஆஞ்சநேயர் ஆலயம் முன் சம்பவம்-
-சி.ஜெகதீஸ்வரன்-
வல்லையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலை தரிசிக்க வெள்ளைக்கோட்டால் வீதியை கடந்த மூதாட்டியை மேட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஊர்காவற்துறை, புளியங்கூடல் மத்தியைச் சேர்ந்த பவரத்தினம் தவமலர் (வயது 70) என்ற மூதாட்டியை ஆவார்.
வடமராட்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் மீண்டும் ஊருக்கு திரும்பிய போது மேற்படி ஆலயத்தை வழிபட வெள்ளைக் கோட்டால் வீதியைக் கடந்த போது மேட்டார் சைக்கிள் ஒன்று மோதியது.
இதில் படுகாயமடைந்த நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.
இம் மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார் சாட்சிகளை நெல்லியடிப் பொலிசார் நெறிப்படுத்தினர்.



















