-மக்களின் தேவை அறிந்து உதவுகள்-
நாட்டில் நிலவிவரும் அனர்த்தம் காரணமாக நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகளை வழங்கிவருகின்றனர்.
இந்நிலையில் ஒருதொகை சமைத்த உணவுகள் வீதியில் வீசப்பட்டுள்ளமையை காட்டும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறுகையில், தனியார் நிவாரண உதவிகள் முறையாக ஒருங்கிணைக்கப்படாத காரணத்தினால் இவ்வாறான நிலைமை காணப்படுகிறது. ஆரசாங்கம் மற்றும் முப்படைகளின் கணக்கிடப்பட்டுள்ள மற்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிவாரண பணிகள் ஊடாக உணவுகள் வீணாவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, நிவாரண உதவிகளை அதிகாரப்பூர்வ அரச வழிமுறைகள் மூலம் வழங்குங்கள். நாட்டில் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்படும் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் சமமாகச் சென்றடைய வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.
















