-இன்று இறுதி முடிவு-
எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற் கொண்டு, வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக எரிபொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதால், வெதுப்பக தொழில்துறையை முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து ஆராய்வதற்காகவே இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் இதன் போது பாண் உள்ளிட்ட அனைத்து வெதுப்பக உற்பத்திப் பொருட்களினதும் திருத்தப்பட்ட புதிய விலைகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


















