டுபாயிலிருந்து சுமார் 42 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கடத்திய பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் நேற்று அதிகாலை ப்ளை துபாய் FZ – 569 விமானத்தில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த பின்னரே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றது.
கைதான நபர் கொழும்பு, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர் 28 ஆயிரம் ‘பிளாட்டினம்’ சிகரெட்டுகள் அடங்கிய 140 சிகரெட் அட்டைப் பெட்டிகளை தனது சூட்கேஸிலும் ஒரு அட்டைப் பெட்டியிலும் கொண்டுவந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சந்தேக நபர் எதிர்வரும் 10 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


















