2025ம் ஆண்டு ஜனவரி தொடக்கம் செப்ரெம்பர் வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கான வரவுகள் 827 மில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளது.
இது குறித்து இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளதாவது, 2024ம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இது, 138 சதவீதம் அதிகரிப்பைக் காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த முதலீட்டு வரவு நான்கு மூலதங்களினுடாக கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பங்கு மூலதனம் ஊடாக 133 மில்லியன் அமெரிக்க டொலரும், மீண்டும் முதலீடு செய்யப்பட்ட வருவாய் ஊடாக – 132 மில்லியன் அமெரிக்க டொலரும், முதலீட்டு நிறுவனங்களுக்கான வெளிநாட்டு கடன்களினூடாக 231 மில்லியன் அமெரிக்க டொலரும் முதலீடுகளுக்கான நீண்டகால வெளிநாட்டு வணிகக் கடன்களினூடாக 331 மில்லியன் அமெரிக்க டொலரும் கிடைக்கப்பெற்றுள்ளன.

















