நாகொடை வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சிகிச்சை பெற்று வரும் கைதி ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த கைதி நீதிமன்ற உத்தரவுக்கு அமைய களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று காலை 6 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.
சத்திர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கைதியின் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
கைதி அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.


















