ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் மிகவும் சக்திவாய்ந்த அதிரடித் தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜோர்டானில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்குப் பதிலடியாகவே ஈரான் மீதான இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் சேத விபரங்கள் குறித்து உடனடியாக தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.


















